இலங்கை
உள்ளூராட்சித் தேர்தல்; மீளப் பெற்றுக்கொண்ட 118 மில்லியன் ரூபா!
உள்ளூராட்சித் தேர்தல்; மீளப் பெற்றுக்கொண்ட 118 மில்லியன் ரூபா!
இரத்து செய்யப்பட்ட 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வைப்புத் தொகையிலிருந்து 118 மில்லியன் ரூபா மீள பெறப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்து செய்யப்பட்ட தேர்தலின் வைப்புத் தொகையை மீள வழங்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதன்படி, அரசியல் கட்சிகள், சுயாதீன குழுக்கள் 118 மில்லியன் ரூபாவை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, 2025ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் அதேநேரம் தேவையான கலந்துரையாடல்கள் பொலிஸ் மா அதிபர், அரசு அச்சுப்பொறியாளர் மற்றும் தபால் மா அதிபர் ஆகியோருடன் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.