சினிமா

“எனக்கு இரத்த புற்றுநோய்..!” விஜயிடம் கோரிக்கை வைத்த பிரபல நடிகர்…

Published

on

“எனக்கு இரத்த புற்றுநோய்..!” விஜயிடம் கோரிக்கை வைத்த பிரபல நடிகர்…

பிரபல கராத்தே மாஸ்டரும், நடிகருமான ஷிகான் ஹுசைனி தன் உடலில் ரத்த புற்றுநோய் பாதிப்பு இருப்பதை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இந்த தகவலை அவர் சமீபத்தில் ஒரு சமூக ஊடக ப்ளாட்ஃபார்மில் பகிர்ந்ததை அடுத்து, அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஷிகான் ஹுசைனி விஜய் நடித்த பத்ரி படத்தின் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். அதில் இவர் தளபதி விஜய்க்கு உடற்பயிற்சி பயிற்சியாளராக நடித்திருந்தார்.மேலும் இவர் தற்போது பல விடயங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் “எனக்கு ரத்த புற்றுநோய் வந்திருக்கிறது. நான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் வேண்டும். நான் கராத்தே சொல்லிக்கொடுக்கும் இடத்தை விற்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன். பவன் கல்யாண் இங்கு வந்துதான் கராத்தே கற்றுக்கொண்டு சென்றார். எனவே அவர் இந்த இடத்தை வாங்கிக்கொள்ள வேண்டும். அதேபோல் விஜய்க்கு ஒரு கோரிக்கை. அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும்!” என கூறியுள்ளார்.மேலும் நான் இன்னும் கொஞ்ச நாள்தான் உயிரோடு இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.இவரது இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் மிகவும் கவலையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version