இலங்கை
மகளிர் தினத்தை முன்னிட்டு யாழில் மாபெரும் கவனவீர்ப்பு பேரணி!
மகளிர் தினத்தை முன்னிட்டு யாழில் மாபெரும் கவனவீர்ப்பு பேரணி!
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் மாபெரும் கவனவீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த பேரணியானது பான்ட்வாத்திய இசையுடன் நல்லூர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பித்து கிட்டுப்பூங்கா வரை நடைபவனியாக சென்று பின்னர் கிட்டுப் பூங்காவில் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு மகளிர் தினம் ஆரம்பமானது. இதன்போது மகளிர்களின் உரைகள் இடம்பெற்றன.
பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குக, பாலியல் குற்றங்களை துரிதமாக விசாரிக்க, நடமாடும் நீதிமன்றங்களை உருவாக்குக, பெண்மனித உரிமை செயற்பாட்டாளர்களை அரச புலனாய்வாளர்கள் பின் தொடர்வது, தொலைபேசியில் அழைப்பது, புகைப்படம் எடுப்பது, விசாரணை செய்வதை உடன்நிறுத்துக என்ற வாசகங்கள் எழுதிய பதாகையை தாங்கிய வாகனமும் பேரணியில் ஈடுபட்டது.
மேலும், வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினால் இந்த பேரணியானது முன்னெடுக்கப்பட்டு இதில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை , மாவட்டங்களைச் சேர்ந்த மகளிர் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான மகளிர்கள் கலந்துகொண்டனர்.