இந்தியா

மார்ச் 14-ல் புறநோயாளிகள் பிரிவு இயங்காது: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தகவல்

Published

on

மார்ச் 14-ல் புறநோயாளிகள் பிரிவு இயங்காது: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தகவல்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வருகின்ற 14ஆம் தேதி ஹோலி பண்டிகை முன்னிட்டு புற நோயாளிகள் பிரிவு இயங்காது என்றும், நோயாளிகள் அன்று வந்து சிரமப்பட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.புதுச்சேரி கோரிமேடு பகுதியில் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற இந்த மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.தினந்தோறும் காலை புற நோயாளிகள் பிரிவு மூலம் பல்வேறு நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வரும் 14-ம் தேதி வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகையை ஒட்டி மத்திய அரசின் விடுமுறை தினம் என்பதால், ஜிப்மர் மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே, நோயாளிகள் வந்து சிரமப்பட வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அவசர சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சிகிச்சை பிரிவுகளும் வழக்கம்போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.செய்தி: பாபு ராஜேந்திரன்  – புதுச்சேரி.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version