சினிமா
மிரட்டும் கர்நாடகா, மத்திய அரசுக்கு பறந்த கடிதம்.. ராஷ்மிகாவுக்கும், கன்னடர்களுக்கும் இதுதான் பிரச்சனை
மிரட்டும் கர்நாடகா, மத்திய அரசுக்கு பறந்த கடிதம்.. ராஷ்மிகாவுக்கும், கன்னடர்களுக்கும் இதுதான் பிரச்சனை
நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் சென்றிருப்பது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோயின் ஆக வலம் வரும் ராஷ்மிகாவுக்கு கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சில பெரிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருப்பது தான் இதற்கு காரணம்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பரபரப்பாக சுழன்று கொண்டிருக்கிறார் ராஷ்மிகா. இவர் முதல் முதலில் அறிமுகமானது கன்னட படத்தில் தான்.
பெங்களூருவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவிற்கு பெங்களூரு அரசு ராஷ்மிகாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. தன்னுடைய வீடு ஹைதராபாத்தில் இருப்பதாகவும் தனக்கு பெங்களூரு எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது எனவும் ராஷ்மிகா பதில் சொன்னதாக சொல்லப்படுகிறது.
இதனால் அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் மற்றும் துணை முதலமைச்சர் ரஷ்மிகாவுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த கண்டனம் மிரட்டும் பாணியில் இருப்பதால் இப்போது அவருக்கு பாதுகாப்பு வழங்குமாறு மத்திய அரசுக்கு கடிதம் சென்று இருக்கிறது.
இந்த நிலையில் தனக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை எனவும், தான் பெங்களூரு எங்கே இருக்கிறது என்று சொன்னது போல் வெளிவரும் செய்திகள் உண்மையில்லை எனவும் ராஷ்மிகா தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.