சினிமா

வாய்ப்பில்லாமல் தவிக்கும் மகிழ் திருமேனி.. நிம்மதி பெருமூச்சு விடும் விக்னேஷ் சிவன்

Published

on

வாய்ப்பில்லாமல் தவிக்கும் மகிழ் திருமேனி.. நிம்மதி பெருமூச்சு விடும் விக்னேஷ் சிவன்

ஆக்சன் படங்களை எடுப்பதில் மிகவும் கை தேர்ந்தவர். இந்நிலையில் அஜித்தை வைத்து படத்தை எடுத்திருந்தார். இந்தப் படத்திற்காக அஜித் ரசிகர்கள் மூன்று வருடமாக காத்திருந்த நிலையில் ஒரு வழியாக சமீபத்தில் வெளியாகி இருந்தது.

ஆனால் மாஸ் நடிகராக இருக்கும் அஜித்துக்கு ஏற்ற கதையாக இந்த படம் அமையவில்லை என பலரும் கூறி வந்தனர். மேலும் இணையத்தில் அதிகமாக விடாமுயற்சி பற்றி ட்ரோல்கள் வெளியானது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரனின் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

ஆனால் விடாமுயற்சி படத்தை இயக்கிய பிறகு மகிழ் திருமேனிக்கு பட வாய்ப்புகள் வரவில்லையாம். மேலும் விடாமுயற்சி படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது விக்ரம் பட வாய்ப்பு வந்திருக்கிறது. சில காரணங்களினால் அப்போது அந்த படத்தை எடுக்க முடியாமல் போனது.

ஆனால் விடாமுயற்சி ரிலீஸுக்கு பிறகு மகிழ் திருமேனியின் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன் வரவில்லை. இந்த சூழலில் முதலில் அஜித்தின் படத்தை இயக்குவதாக இருந்தது. கதை சரியில்லை என்று லைக்கா நிறுவனம் நிராகரித்துவிட்டது.

இப்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் படம் இயக்கி வருகிறார். சமீபத்தில் பிரதீப்பின் டிராகன் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. ஆகையால் அடுத்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

Advertisement

ஒருவேளை அஜித்தின் படத்தை எடுத்திருந்தால் நமக்கும் இதே நிலைமைதான் ஏற்பட்டிருக்கும் என விக்னேஷ் சிவன் யோசித்துள்ளார். இப்போது பிரதீப்பின் படத்தை எடுத்து வருவதால் அதன் மார்க்கெட் அதிகரிக்கும் என நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version