நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 11/03/2025 | Edited on 11/03/2025

இயக்குநர் ஜிஜு இயக்கி 107 விருதுகளை வென்ற சமூக விழிப்புணர்வு கொண்ட ‘கழிப்பறை’ என்ற ஆவண படம் தற்போது முழு நீள திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தை வன்ஷிகா மக்கர் பிலிம்ஸ் ப்ரீத்தி அமித்குமார் தயாரிக்க கதையின் முக்கிய நாயகியாக தனலட்சுமி நடித்துள்ளார். இப்படத்திற்கு ஸ்ரீகாந்தன் இசையமைக்கும் நிலையில் உன்னிகிருஷ்ணன், வன்ஷிகா மக்கர் மற்றும் ஸ்ரீகாந்தன் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர். 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 16ஆம் தேதி நடந்தது. படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதையின் நாயகியாக நடிக்கும் தனலட்சுமி சின்னத்திரையில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் குறித்து பேசிய அவர், பல வருட போராட்டங்களுக்கு பிறகு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் இந்தப் படம் வெளியீட்டுக்கு பிறகு சினிமாவில் நிச்சயம் வளம் வருவேன் என்றும் கூறியுள்ளார்.

Advertisement