இலங்கை

இறுதி கட்டத்தை எட்டிய கச்சத்தீவுக்கான ஏற்பாடுகள்!

Published

on

இறுதி கட்டத்தை எட்டிய கச்சத்தீவுக்கான ஏற்பாடுகள்!

2025 மார்ச் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் வரலாற்று சிறப்புமிக்க அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை நடத்துவதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடல் வழியாக கச்சத்தீவுக்கு கொண்டு வர கடற்படை கப்பல்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், திருவிழாவை வெற்றிகரமா நடத்த தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவும் பணியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அதனடிப்படையில், திருவிழாவுக்கு வரும் கப்பல்களுக்கு தற்காலிக இறங்கு துறைகளை அமைத்தல், குடிநீர் வசதிகள் அமைத்தல், சுகாதார வசதிகள் அமைத்தல், சாலைகள் அமைத்தல், மின்சார வசதிகள் அமைத்தல், மருத்துவ வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இன்று இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதுடன், பெருவிழாவிற்கு வரும் மக்களுக்கு தகவல் தொடர்பு வசதிகளை வழங்குவதற்காக கச்சத்தீவில் தகவல் தொடர்பு கோபுரம் நிறுவும் பணியானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், தீவு மற்றும் கரையோர பகுதிகளில் சட்டவிரோத செயல்களை தடுக்கவும், பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் கண்காணிப்பு கமரா அமைப்பை பொருத்தும் பணிகளும் நிறைவடைந்துள்ளதுடன், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவ கடற்படையின் முழு உழைப்பு, தொழில்நுட்ப மற்றும் வள பங்களிப்பை வழங்குவதற்கு  ஏனைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து  செயற்பட்டுவருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version