இலங்கை

உயிரிழந்து 20 வருடங்களின் பின் நடிகையின் மரணத்தில் பரபரப்பு!

Published

on

உயிரிழந்து 20 வருடங்களின் பின் நடிகையின் மரணத்தில் பரபரப்பு!

உயிரிழந்து 20 வருடங்களின் பின் பிரபல நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல என்று முறைப்பாட்டு மனு அளித்துள்ளமை பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சௌந்தர்யா. இவர் கடந்த 2004ஆம் ஆண்டு ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

Advertisement

இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த சிட்டிமல்லு என்பவர் பொலிஸ் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியரிடமும் , ‘நடிகை சௌந்தர்யாவின் மரணம் விபத்தல்ல. தெலுங்கு நடிகர் மோகன் பாபுவுக்கும் சௌந்தர்யாவின் கொலைக்கும் தொடர்பு இருப்பதாகவும் மனு அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

உயிரிழந்த நடிகை சௌந்தர்யாவுக்கு ஜல்பள்ளி கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை வாங்க மோகன் பாபு முயற்சித்திருக்கிறார்.

ஆனால் அந்த நிலத்தை விற்பனை செய்ய சௌந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுத்திருக்கிறார்.

Advertisement

இந்த நிலையில் சௌந்தர்யாவின் மரணத்திற்கு பிறகும் அந்த நிலத்தை விற்பனை செய்யுமாறு அமர்நாத்திற்கு அழுத்தம் கொடுத்த மோகன் பாபு , நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகையின் நிலத்தை மீட்டு ஆதரவற்றோர், இராணுவத்தினர் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும் என சிட்டிமல்லு மனுவில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version