சினிமா

‘எமகாதகி’ வெற்றி குறித்து மனம் திறந்த படக்குழுவினர்!

Published

on

‘எமகாதகி’ வெற்றி குறித்து மனம் திறந்த படக்குழுவினர்!

பெப்பின் ராஜ் இயக்கத்தில் ரூபா, நரேந்திர பிரசாத், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 7 ஆம் திகதி வெளியான திரைப்படம் எமகாதகி. இத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதையடுத்து படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர்.

இது தொடர்பில் நடிகை கீதா கைலாசம் கூறும்போது, “படம் முழுக்க எனக்கான இடம் இருந்தது. படத்தில் பணியாற்றி 45 பேரும் ஒன்றாக கிராமத்தில் இருந்தோம். அந்த ஊர் மக்களும் எமது நண்பர்களாகிவிட்டனர்.

Advertisement

படத்தின் கதாநாயகி ரூபா 35 நாட்கள் சடலமாக நடித்தார். அவரது அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. இப் படம் எனது வாழ்வில் மிகவும் முக்கியமானது.

இப் படம் எப்போது வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தோம். இது இயக்குநரின் முதல் திரைப்படம் போலவே இல்லை. சிறப்பாக இயக்கியிருந்தார்” எனக் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version