சினிமா

காயாக இருக்கும்போதே பறித்த ராகவா லாரன்ஸ்.. டிராகன் கயாடு லோகரை பங்கம் பண்ணிய மாஸ்டர்ஜி

Published

on

காயாக இருக்கும்போதே பறித்த ராகவா லாரன்ஸ்.. டிராகன் கயாடு லோகரை பங்கம் பண்ணிய மாஸ்டர்ஜி

தமிழ் சினிமாவிற்கு அடுத்த குஷ்பூ, நயன்தாரா கிடைத்துவிட்டார் என்றெல்லாம் பாராட்டப்படுபவர் டிராகன் படத்தில் நடித்த கயாடு லோகர். பார்ப்பதற்கு அவ்வளவு ஹோமிலியாகவும், மார்டனாகவும் இருக்கிறார் ஆனால் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு பின்னால் ஒரு பெரிய கதையே இருக்கிறது.

2021 இல் அறிமுகமாகி இதுவரை ஆறு படம் நடித்திருக்கிறார். இப்பொழுது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் டிராகன் தான், தமிழில் இவரது முதல் படம். இந்தப் படத்திலேயே நல்ல புகழை பெற்றுவிட்டார். குஷ்பூ, நயன்தாரா அளவிற்கு இவர் தமிழ் சினிமாவை ஆட்சி செய்வார் என கூறி வருகின்றனர்.

Advertisement

ஆனால் இவரை ஆரம்பித்திலேயே ராகவா லாரன்ஸ், தன் படத்திற்கு கமிட் செய்துள்ளார். அதுமட்டுமின்றி அவரிடம் இரண்டு வருடங்கள் தமிழில் எந்த படமும் நடிக்க கூடாது எனவும் அக்ரிமெண்ட் போட்டு அவரை கட்டுக்கோப்பில் வைத்து பக்காவாக காய் நகர்த்தி உள்ளார். பல கஷ்டத்துக்குப் பிறகு இப்பொழுது தான் தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளார் கயாடு லோகர்.

சண்டை பயிற்சியில் பெயர் பெற்ற அன்பறிவு மாஸ்டர்கள், ராகவா லாரன்ஸை வைத்து ஒரு படம் எடுப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் இதுவரை கை கூடி வரவில்லை. அந்த படத்தில் முதலில் ஹீரோயினாக கமிட்டானவர் கயாடு லோகர் தான். தமிழ் சினிமாவை பற்றி தெரியாத அவர் அப்பொழுது இந்த படத்தில் மாட்டிக் கொண்டார்.

லாரன்ஸ்ஸின் இந்த படத்தை இரண்டு வருடங்கள் எடுக்கப் போவதாகவும். அதற்கு அப்புறம் தான் அவர் வேறு தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என அக்ரிமெண்ட் போடப்பட்டு அவரை சிக்க வைத்துள்ளனர். இதனால் படம் எடுக்காவிட்டாலும் முழுவதுமாக அந்த இரண்டு வருடங்கள் காத்திருந்து அக்ரிமெண்ட் முடிந்த பின் தான் இப்பொழுது டிராகன் படத்தில் தலைக்காட்டி உள்ளார். அதர்வா நடிக்கும் இதயம் முரளி படத்திலும் இவர்தான் ஹீரோயின்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version