விளையாட்டு

டெல்லி மாரத்தான் போட்டியில் ஆள்மாறாட்டம்: ரயில்வே தடகள வீரர் உட்பட 3 பேருக்கும் தடை

Published

on

டெல்லி மாரத்தான் போட்டியில் ஆள்மாறாட்டம்: ரயில்வே தடகள வீரர் உட்பட 3 பேருக்கும் தடை

கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தலைநகரில் டெல்லியில் அப்பல்லோ டயர்ஸ் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்திய தடகள கூட்டமைப்பு அங்கீகரித்த இந்தப் போட்டியில், ரயில்வே மருத்துவரின் மனைவி மற்றும் மற்றொரு பங்கேற்பாளருக்காக ஓடியதாக ரயில்வே தடகள வீரர் மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. “பிப் சுவிட்ச்” மூலம் ஆள்மாறாட்டம் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆங்கிலத்தில் படிக்கவும்: Switching bibs, Railway athlete ran marathon for doctor’s wife, another; all 3 bannedஇந்தப் புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ரயில்வேயில் விளையாட்டு ஒதுக்கீட்டில் ஊழியராக பணியாற்றும் தடகள வீரர், ரயில்வே மருத்துவரின் மனைவி மற்றும் மற்றொரு பங்கேற்பாளர் ஆகிய மூன்று பேருக்கும் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்த மாரத்தான் போட்டியை ஏற்பாடு செய்த ஏற்பாட்டாளர்களான என்.இ.பி ஸ்போர்ட்ஸ், தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த தகவலில், “வேறொருவருக்காக ஓடுவது ஏமாற்றுவதற்குச் சமம். பந்தய மேலாண்மை குழு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சனைகளை குறைக்க, சமூக வலைதள பதிவின் மூலம் இந்த முடிவைப் பகிரங்கப்படுத்துவோம்” என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக மேலும் அறிய என்.இ.பி ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் மற்றும் மாரத்தான் போட்டி இயக்குநரான நாகராஜ் அடிகா-வை தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தொடர்பு கொண்டு பேசியது. அப்போது அவர், ​​“அப்பல்லோ டெல்லி மராத்தானின் போது,  எலைட் அல்லாத பிரிவுகளில் மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன சம்பந்தப்பட்ட மூன்று விளையாட்டு வீரர்களை நாங்கள் இடைநீக்கம் செய்துள்ளோம். திங்கட்கிழமை இந்திய தடகள கூட்டமைப்பிற்கு எங்கள் அறிக்கையை சமர்ப்பிப்போம். கூட்டமைப்பு அவர்கள் விரும்பியபடி மேலும் நடவடிக்கை எடுக்கலாம்” என்று கூறினார்.முழு மாரத்தானில் பங்கேற்ற ரயில்வே மருத்துவரின் மனைவியின் நேரத்தைப் பற்றிய கருத்து வேறுபாடுதான் தவறு செய்ததற்கான அறிகுறியைக் கொடுத்தது என்று தெரிந்தவர்கள் கூறுகிறார்கள். ஓட்டப்பந்தய வீரர் பந்தயத்தின் மூன்றில் ஒரு பங்கு நேரம் மெதுவாக இருந்த போதிலும், அதன் பிறகு, அவர் ஓடியதில் வியக்கும் அளவிலான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. வேகம் வேகமாக இருந்த பந்தயத்தின் கட்டத்தில் ரயில்வே தடகள வீரர் தனது பிப் அணிந்திருப்பதை ஏற்பாட்டாளர்கள் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் காட்டுகின்றன.மாரத்தான்களில், பங்கேற்பாளர்களின் நேரம் ஒரு சிப் மூலம் பதிவு செய்யப்படுகிறது, பெரும்பாலும் டிரான்ஸ்பாண்டர் அல்லது RFID டேக், ஓட்டப்பந்தய வீரரின் மார்பில் உள்ள பிப்பில் குறிக்கப்படுகிறது. தொடக்கத்திலும் முடிவிலும் ஸ்கேனரின் அளவீடுகள் ஓட்டப்பந்தய வீரர் பந்தயத்தை முடிக்க எடுக்கும் நேரத்தை தீர்மானிக்கின்றன.இது தொடர்பாக பேச ரயில்வே தடகள வீரரை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தொடர்பு கொண்டபோது, ​​அவர் தனது பெயரைப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை. இதேபோல், கருத்து கேட்க ரயில்வே மருத்துவரின் மனைவியை  ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை. ஆனால் அவரது கணவர் பதிலளித்தார்.இது பற்றி பேசிய அவர், “இந்த விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறேன். 34 கி.மீ.க்குப் பிறகு அவர் மயக்கமடைந்தார் என்று என்னால் சொல்ல முடியும். ரயில்வே தடகள வீரர் (விளையாட்டு ஒதுக்கீட்டு ஊழியர்) தனது பிப்பை தவறாகக் கொண்டு ஓடினார். இதை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம், அவருக்கு தடை விதிக்கப்படவில்லை. நாங்கள் கேட்டுள்ளோம், மேலும் என்.இ.பி ஸ்போர்ட்ஸ் அவர்களின் வலைத்தளத்திலிருந்து அவரது செயல்திறன் தரவை நீக்கியுள்ளது,” என்று கூறினார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version