இலங்கை

தீயணைப்பு சேவைக்காக தேசிய திட்டம்!

Published

on

தீயணைப்பு சேவைக்காக தேசிய திட்டம்!

தீயணைப்பு சேவைக்காக தேசிய திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரபா ருவன் செனரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் நாடு முழுவதும் உள்ள அனைத்து தீயணைப்புப் பிரிவுகளின் தலைமை அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

சேவை வழங்களின் போது ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு தேசிய திட்டமொன்று தயாரிக்கப்படவுள்ளது.

தற்போதுள்ள பிரச்சினைகளைக் குறைத்து, பிற பண்டிகை சந்தர்ப்பங்களில் வழங்கப்படும் சேவைக்கு திறமையான மற்றும் தரமான சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்புக் காணப்படுவதாகவும் 

தற்போது காணப்படும் மனித வளங்கள் மற்றும் தொழில்நுட்ப பற்றாக்குறை காரணமாக திறமையான சேவையை வழங்குவது ஒரு பெரிய சவாலாக உள்ளது என்று கண்டி தீயணைப்பு சேவை பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் மனிதவளப் பற்றாக்குறை, தொழில்நுட்ப மற்றும் நீர் விநியோகம் என்பவற்றின் போது ஏற்படும் சிக்கல்கள் காரணமாக மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் அவர்கள் தங்கள் சேவைகளைச் செய்து வருவதாக மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் எதிர்வரும் பக் மாதத்தில் நடைபெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள தலதா மாளிகை கண்காட்சிக்காக பெரஹெரவிற்காக தீயணைப்புத் பிரிவினால் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version