இலங்கை

நாடளாவிய ரீதியில் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நாளை வரை தொடரும்!

Published

on

நாடளாவிய ரீதியில் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு நாளை வரை தொடரும்!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போதிலும், நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பை கைவிடப்போவதில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

 குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு நாளை (13) காலை 08.00 மணி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

 இந்நிலையில் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா பொது வைத்தியசாலை, முல்லைத்தீவு வைத்தியசாலை, கிளிநொச்சி பொது வைத்தியசாலை வைத்தியர்களும் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

 இதன் காரணமாக சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் பெரும் அசோகரியங்களுக்கு உள்ளானதுடன் சிகிச்சை பெற முடியாத நிலையில் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,

பலமைல் தூரத்தில் இருந்து தனியார் பேருந்துகளில் வருகை தந்த நோயாளர்கள் பெரும் பண நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version