இலங்கை
நுவரெலியாவில் மருத்துவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
நுவரெலியாவில் மருத்துவர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!
நாடளாவிய ரீதியில் அரச மருத்துவ சங்க அதிகாரிகள் இன்று (12) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் கடமையாற்றும் மருத்துவர்களும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அநுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவ ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே குறித்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ளது.
இதன் காரணமாக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனை நடவடிக்கைகள் சற்று ஸ்தம்பிதமடைந்தன சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்கு வந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். குறிப்பாக வெளிநோயாளர் பிரிவு முற்றாக செயலிழந்து காணப்பட்டது.
எவ்வாறாயினும் விபத்து, அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன வழமை போல் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.