சினிமா
நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பட்டையக் கிளப்பிய விடாமுயற்சி…! சந்தோசத்தில் தல ரசிகர்கள்!
நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பட்டையக் கிளப்பிய விடாமுயற்சி…! சந்தோசத்தில் தல ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் தல அஜித் நடிப்பில் வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படம், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுக் காணப்பட்டது. இது தற்போது நெட்ப்ளிக்ஸ் தளத்திலும் மாஸாக ஓடிக் கொண்டிருக்கிறது.மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவனம் தயாரித்த விடாமுயற்சி படத்தினை பிப்ரவரி 6ம் திகதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. திரையரங்குகளில் மாபெரும் வசூலைப் பெற்றிருந்தது. அதைத்தொடர்ந்து, உலகளவில் ரூ. 250 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்தது.அஜித் மற்றும் மகிழ்திருமேனி கூட்டணியில் வந்த முதல் படம் என்பதால் இப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. மேலும் த்ரிஷா, ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்ததால் இப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்திருந்தது.அத்துடன் விடாமுயற்சி படம் இந்தியாவிலேயே அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகவும் காணப்பட்டது. இதனை அடுத்து மார்ச் 3ஆம் திகதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியானது. நெட்ப்ளிக்ஸிலும் அமோக வரவேற்பைப் பெற்றுக் கொண்டதனைப் பார்த்து தல ரசிகர்கள் மிகுந்த சந்தோசம் அடைந்து கொண்டனர்.