இந்தியா
பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; மூவர் சாவு!
பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து; மூவர் சாவு!
ஜம்மு-காஷ்மீரின் மஹோர் அருகே நேற்று பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹோரின் கங்கோட்டில் ஜம்மு காஷ்மீரிலிருந்து சாங்லிகோட்டுக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சேர்க்கப்பட்டதுடன் அவர்களில் நால்வர் மேலதிக சிகிச்சைக்காக ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.