உலகம்

பாகிஸ்தான் ரயில் கடத்தல் – 104 பயணிகள் மீட்பு

Published

on

பாகிஸ்தான் ரயில் கடத்தல் – 104 பயணிகள் மீட்பு

பாகிஸ்தானில் பயணிகள் ரெயில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தின் பெஷாவர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.

Advertisement

ரெயிலை கடத்திய பயங்கரவாதிகளில் 16 பேரை இதுவரை கொன்றுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பயணிகளில் 104 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

முன்னதாக, பலுசிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட், “பாதுகாப்புப் படையினர் 104 பயணிகளை (58 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள்) ஒரு பெட்டியிலிருந்து மீட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version