சினிமா

“பிச்சை கூட எடுப்பேன், ஆனால் வடிவேலுடன் நடிக்க மாட்டேன்!” – உண்மையை உடைத்த சோனா!

Published

on

“பிச்சை கூட எடுப்பேன், ஆனால் வடிவேலுடன் நடிக்க மாட்டேன்!” – உண்மையை உடைத்த சோனா!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக ரசிகர்களிடம் பிரபலமான சோனா, சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறிய கருத்தால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அவர் அதில் கூறியதாவது, “பிச்சை கூட எடுப்பேன், ஆனால் வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன்!” என்ற அவரின் கருத்து திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதாவது சோனாவிடம் நடுவர் ஒருவர் “உங்கள் திரைப்பயணத்தில் எந்த நடிகருடன் மீண்டும் நடிக்க விரும்பீர்கள்? யாருடன் நடிக்க விரும்ப மாட்டீர்கள்?” என்று கேட்டிருந்தார். அதற்கு அவர் பதிலளிக்கையில் “பிச்சை கூட எடுப்பேன், ஆனால் வடிவேலுவுடன் நடிக்க மாட்டேன்!” எனத் தெரிவித்தார்.இந்த கடுமையான பதில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. மேலும் சோனா ஏன் இப்படி கூறினார் எனப் பலரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். சிலர் இதற்குக் காரணம் சோனா முன்பு வடிவேலுவுடன் சில படங்களில் நடித்திருக்கிறார் அதனாலேயே இப்படி கூறியிருப்பார் என்று கருத்துத் தெரிவிக்கின்றனர். பல நடிகைகள், வடிவேலுவுடன் நடிப்பது ஒரு சந்தோஷமான அனுபவம் என கூறியிருக்கிறார்கள். எனினும் சோனா இதற்கு முற்றிலும் மாறான கருத்தை தற்பொழுது பதிவு செய்துள்ளார். சோனாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் தீயாய் பரவி, ரசிகர்களிடையே பெரிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version