உலகம்

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி கைது!

Published

on

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி கைது!

பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருட்களுக்கு எதிரான போர் தொடர்பாக மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்டர்போல் பிடியாணை உத்தரவு பிறப்பித்தன் பின்னணியில் இக்கைது இடம்பெற்றுள்ளது.

Advertisement

டுடெர்ட்டே ஹாங்கொங்கிலிருந்து நாடு திரும்பிய சிறிது நேரத்திலேயே மணிலா விமான நிலையத்தில் வைத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2016 முதல் 2022 வரை தென்கிழக்கு ஆசிய நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோது டுடெர்ட்டே மேற்கொண்ட கொடூரமான போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

79 வயதான அவர் கைது செய்யப்படலாம் என்ற செய்திகளுக்கு பதிலளிக்கும் போது, ​​சிறைக்குச் செல்லத் தயாராக இருப்பதாக முன்னதாகக் கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version