இலங்கை

பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்ய ஆதரவு வழங்கும் ஜப்பான்

Published

on

பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்ய ஆதரவு வழங்கும் ஜப்பான்

நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரையும் பாதுகாத்து இலங்கையில் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்குத் தேவையான கொள்கை ரீதியான மாற்றங்கள் மற்றும் நிறுவனக் கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு ஜப்பான் ஆதரவு தெரிவித்துள்ளது.

இச் செயற்றிட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் ஜப்பான் நியாய வர்த்தக ஆணைக்குழு என்பன ஆதரவளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Advertisement

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தகத்தில் நியாயபூர்வமிக்க தன்மையை உருவாக்குவதன் மூலம் நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்கள் பாதுகாக்கப்படுவதுடன், இதன் மூலம் நாட்டில் போட்டிமிக்க சந்தை உருவாக்கப்படுகின்றது எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version