இலங்கை
மனநலம் பாதிக்கப்பட்ட யுவதி மீது துஷ்பிரயோகம்; துப்புரவுப் பணியாளர் கைது!
மனநலம் பாதிக்கப்பட்ட யுவதி மீது துஷ்பிரயோகம்; துப்புரவுப் பணியாளர் கைது!
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்டு, உளவியல் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் துப்புரவுப் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணம் முடிப்பதாக வாக்குறுதி வழங்கியே மனநலம் பாதிக்கப்பட்ட அந்த யுவதியை அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்று தெல்லிப்பழை பொலிஸாரிடம் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபரான துப்புரவுப் பணியாளரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. சந்தேகநபரை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் நகர்வுகளும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.