உலகம்

மொரீஷியஸ் ஏரியில் கும்பமேளா கங்கை நீரை கலந்த இந்திய பிரதமர் மோடி

Published

on

மொரீஷியஸ் ஏரியில் கும்பமேளா கங்கை நீரை கலந்த இந்திய பிரதமர் மோடி

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக மொரீஷியஸ் நாட்டுக்கு நேற்று சென்றார். மொரீஷியஸ் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அந்நாட்டு அரசு விடுத்த அழைப்பை ஏற்று அங்கு பயணம் மேற்கொண்டார். 

தலைநகர் போர்ட்லூயிஸ் சென்றடைந்த மோடியை மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் நேரில் வரவேற்றார். மேலும் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். 

Advertisement

இந்நிலையில், மொரீஷியஸ் நாட்டில் உள்ள கிராண்ட் பேசின் என்று அழைக்கப்படும் கங்கா தலாவ் ஏரியில் மக கும்பமேளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நீரை பிரதமர் மோடி கலந்தார்.

கங்கா தலாவ் ஏரியை இந்துக்கள் புனிதமான இடம் என்று நம்புகிறார்கள். இந்த ஏரியில் பிரதமர் மோடி ஆரத்தி எடுத்து பிரார்த்தனை செய்தார்.

லங்கா4 (Lanka4)

Advertisement

(வீடியோ இங்கே அழுத்தவும்)

அனுசரணை

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version