சினிமா

வடசென்னை 2 படத்தில் தனுஷுக்குப் பதில் ஜெய்பீம் நடிகர்…! யார் தெரியுமா?

Published

on

வடசென்னை 2 படத்தில் தனுஷுக்குப் பதில் ஜெய்பீம் நடிகர்…! யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் சிறப்பான படைப்புகளில் ஒன்றாக இருக்கும் “வடசென்னை” 2018ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தனுஷ் நடிப்பிலும் வெற்றிமாறன் இயக்கத்திலும் உருவான இந்த திரைப்படம் வடசென்னையின் கூலித் தொண்டர்கள் மற்றும்  அரசியல் விளையாட்டுகள் போன்றவை கலந்த ஒரு தீவிரமான கதைக்களத்துடன் வெளிவந்தது.இதன் வெற்றியைத் தொடர்ந்து “வடசென்னை 2″ தயாராகி வருவதாகவும், இதில் மணிகண்டன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்த படத்தை வெற்றிமாறன் இயக்காமல் அவரது அசிஸ்டெண்ட் இயக்கவுள்ளார் எனவும் புதிய தகவலாக வெளியாகியுள்ளன.”வடசென்னை” திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் “வடசென்னை 2”, முதல் பாகத்தை போலவே கடுமையான திரைக்கதையுடன் உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாவது பாகத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடிக்க உள்ளார்.முதல் பாகத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர். இரண்டாம் பாகத்தில் மணிகண்டன் சிறப்பாக நடிப்பாரா? என்று ரசிகர்கள் பல கேள்வியை ஏற்படுத்தி வருகின்றனர். அத்துடன் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் தொடங்குவதற்கு உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version