இந்தியா
விஜய்க்கு எதிராய் பாய்ந்த வழக்கு, கட்டம் கட்டி அடிக்கும் ஆளும் கட்சி.. தலை தப்புமா தவெக?
விஜய்க்கு எதிராய் பாய்ந்த வழக்கு, கட்டம் கட்டி அடிக்கும் ஆளும் கட்சி.. தலை தப்புமா தவெக?
தமிழகத்தில் பல நூறு ஆண்டுகளாய் ஆலமரம் போல் வேரூன்றி இருக்கும் கட்சிகளை எதிர்த்து புதிதாக அரசியல் செய்வது என்பது இமாலய விஷயம்.
அப்படி ஒரு விஷயத்தை செய்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் அதற்கான சில கடினமான பாதைகளிலும் பயணித்து தான் வருகிறார்.
அப்படித்தான் தற்போது அவர் மீது குறிப்பிட்ட மதத்தின் ஒரு குழு போலீஸ் புகார் அழைத்திருக்கிறது. தங்களுடைய விரத காலத்தை விஜய் அவமரியாதை செய்து விட்டதாக அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.
விரதம் இருக்காதவர்கள், குறிப்பிட்ட மதத்தை சாராதவர்கள், ரவுடிகள் என நிறைய பேர் அந்த இடத்தில் கூடியிருந்ததாக குற்றம் சாட்டி இருக்கிறது.
ஒரே மாதத்தை சேர்ந்த இரு குழுக்களில் ஒரு குழு விஜய்க்கு ஆதரவாகவும், ஒரு குழு விஜய்க்கு எதிராக குற்றம் சாட்டுவதுமாக இருக்கிறது.
மேலும் சமீப காலமாக விஜய்க்கு எதிராக நடத்தப்படும் விஷயங்கள் அனைத்தும் ஆளும் கட்சியினரால் திட்டமிட்டு நடத்தப்படுவதாகவும் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் குற்றம் சொல்லி வருகிறார்கள்.
என்னவெல்லாம் நடக்கும் என்பதை தெரிந்து கொண்டுதான் விஜய் அரசியல் களம் கண்டிருப்பார். இது போன்ற சோதனைகளை அவர் எப்படி கடந்து வருகிறார் என பொறுத்திருந்து பார்க்கலாம்.