சினிமா

வில்லனை ஹீரோவாக்கிய சன் டிவி.. டிஆர்பிக்காக இறக்கும் புது சீரியல்

Published

on

வில்லனை ஹீரோவாக்கிய சன் டிவி.. டிஆர்பிக்காக இறக்கும் புது சீரியல்

மற்றும் இரண்டும் டிஆர்பிக்காக போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். சன் டிவியில் கயல், சிங்க பெண்ணே, மூன்று முடிச்சு ஆகிய தொடர்கள் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது.

அதோடு கேப்ரில்லா நடிக்கும் மருமகள் தொடரும் டிஆர்பியில் இடம்பெறுகிறது. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. அதேபோல் சன் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாக்கியலட்சுமி போன்ற தொடர்கள் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Advertisement

இந்நிலையில் சன் டிவி தனது டிஆர்பியை தக்க வைப்பதற்காக புதிய தொடர் ஒன்றை இறக்க இருக்கிறது. அதுவும் இதே தொலைக்காட்சியில் வில்லனாக நடித்தவரை ஹீரோவாக வைத்து புதிய தொடரை எடுக்க உள்ளனர்.

அதாவது சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல் தான் சுந்தரி. இந்த தொடரில் வில்லனாக கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஜிஷ்ணு மேனன். இவருக்கு ‌ அப்போதே நிறைய ரசிகர்கள் இருந்தனர். ஹீரோ ஜாடையில் இருக்கும் இவருக்கு வில்லன் கதாபாத்திரமும் பக்கவாக பொருந்தியது.

தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு அற்புதமாக நடித்திருந்தார். இந்த சூழலில் சன் டிவி இவரை ஹீரோவாக வைத்து தொடரின் ப்ரோமோ வீடியோ எடுத்துள்ளனர். விரைவில் அது வெளியாக உள்ளது.

Advertisement

மேலும் இந்த தொடரில் மற்ற கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. சன் டிவியின் ஹிட் லிஸ்டில் இந்த தொடரும் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version