இலங்கை

ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் முடக்கம்!

Published

on

ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் முடக்கம்!

  பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் சொத்துக்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை முடக்குவதற்கு டாக்கா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பங்களாதேஷில் கடந்த ஆண்டு நடந்த மாணவர்கள் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

Advertisement

ஷேக் ஹசீனா மீது ஊழல், இனப்படுகொலை உள்ளிட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவரை நாடு கடத்த வேண்டும் என்று பங்களாதேஷ் வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஷேக் ஹசீனா குடும்பத்தின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஷேக் ஹசீனா மீதான ஊழல் வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று டாக்கா நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisement

ஷேக் ஹசீனாவின் இல்லமான சுதாசதன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சில சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஷேக் ஹசீனாவின் குடும்பத்திற்குச் சொந்தமான 124 வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version