இலங்கை
54 மாணவர்கள் மருத்துவமனைகளில் அனுமதி!
54 மாணவர்கள் மருத்துவமனைகளில் அனுமதி!
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட கரடியனாறு பகுதியில் உள்ள பாடசாலையில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 54 மாணவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (11) காலை மட்டக்களப்பு செங்கலடி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட கரடியனாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரடியனாறு மகா வித்தியாலத்தில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் காலை உணவு வாங்கி உட்கொண்ட மாணவர்களே இவ்வாறு சுகவீனத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 32 ஆண்கள், 22 பெண்கள் அடங்களாக 54 மாணவர்கள் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கரடியனாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக செங்கலடி மருத்துவமனைக்கும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் கரயனாறு பொலிஸார் மற்றும் செங்கலடி சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள்,மட்டக்களப்பு மேற்கு வலய கல்வி அதிகாரிகளினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.