இலங்கை
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!…
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!…
நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு திசை நோக்கி காற்று வீசும். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 20 முதல் 30 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரித்து வீசும். நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளில் சாதாரண நிலைமையிலிருந்து சற்று அதிகமாக அலையின் தாக்கம் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. (ப)