சினிமா
இயக்குநர் அட்லியுடன் இணையும் விஜய் சேதுபதி…! புது லுக்கில் அசத்தப் போகிறாரா?
இயக்குநர் அட்லியுடன் இணையும் விஜய் சேதுபதி…! புது லுக்கில் அசத்தப் போகிறாரா?
தமிழ் சினிமாவின் வித்தியாசமான நடிகராக பார்க்கப்படும் விஜய் சேதுபதி, தற்பொழுது சிறப்பான கதாபாத்திரங்களில் அசத்தி வருகின்றார். விஜய் சேதுபதி தான் நடிக்கும் படங்களின் கதைகளுக்காக உடலமைப்பை மாற்றிப் புதிய தோற்றத்தில் ரசிகர்களைக் கவர்பவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.சமீபத்தில் அட்லியின் தயாரிப்பில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இந்தப் படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த மாத முடிவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அட்லி, தனது மாஸான கதைகள் மற்றும் தயாரிப்புகளால் திரையுலகில் ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். குறிப்பாக தெறி , மெர்சல் , பிகில் மற்றும் ஜவான் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை வழங்கிய இவர், தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.அந்தவகையில், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. அத்துடன் இந்த படத்திற்காக அவர் உடல் எடையை குறைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த புதிய முயற்சியில் எப்படிப்பட்ட வேடத்தில் விஜய் சேதுபதி வருகிறார் என்பது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.