உலகம்
ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200% வரி விதிக்கவுள்ள டிரம்ப்
ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200% வரி விதிக்கவுள்ள டிரம்ப்
ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மதுபானங்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிலிருந்து வரும் மதுபானங்களுக்கு கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து டிரம்பின் இந்த பழிவாங்கும் நடவடிக்கை வந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் 50 சதவீத வரியை விதிக்கப்போவதாக அறிவித்தது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மதுபானம் உள்ளிட்ட பொருட்களுக்கு 200 சதவீத வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் கூடுதல் வரிகளை திரும்பப் பெறவில்லை என்றால், ஐரோப்பாவிலிருந்து வரும் ஷாம்பெயின் மற்றும் ஒயின் போன்ற மதுபானங்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படும்.
இது அமெரிக்க ஒயின் மற்றும் ஷாம்பெயின் தொழிலுக்கு நன்மை பயக்கும் என்றும் டிரம்ப் கூறினார்.
இதற்கிடையில், கனடா மற்றும் மெக்சிகோவைத் தொடர்ந்து இந்தியா மீது கூடுதல் வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
லங்கா4 (Lanka4)
(வீடியோ இங்கே அழுத்தவும்)
அனுசரணை