உலகம்

சிகிச்சைக்கு வந்தவர்களிடம் சில்மிஷம்..!

Published

on

சிகிச்சைக்கு வந்தவர்களிடம் சில்மிஷம்..!

பிரான்சில் பல காலமாக மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் ஏராளமான பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரான்ஸ் நாட்டின் வான்னெஸ் நகரை சேர்ந்த மருத்துவர் ஜோயல் லிஸ்கோர், தற்போது 74 வயதாகும் ஜோயல் கடந்த 2017ஆம் ஆண்டில் மருத்துவர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் அதற்கு சில ஆண்டுகள் முன்னதாக அவர் குழந்தைகள் ஆபாச வீடியோக்கள் வைத்திருந்த வழக்கில் சிக்கி இருந்தார். 

Advertisement

இந்நிலையில் தற்போது ஜோயல் மீது ஏராளமான பெண்கள் அடுத்தடுத்து முறைப்பாடு அளிக்கத் தொடங்கியுள்ளது பிரான்சையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த 1989ஆம் ஆண்டு முதலாக மருத்துவராக இருந்து வரும் ஜோயல் தன்னிடம் சிகிச்சைக்கு வரும் சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அவர்கள் தற்போது வளர்ந்து பெரியவர்களாகிவிட்ட நிலையில், இப்போதுதான் வரிசையாக இந்த வன்கொடுமை சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

சுமார் 299 பெண்கள் மருத்துவர் ஜோயல் மீது முறைப்பாடு அளித்துள்ள நிலையில், இதுத்தொடர்பான விசாரணையில் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார் ஜோயல். நோயாளிகள் மயக்க நிலையில் இருக்கும்போதும் அவர்களிடம் பாலியல் ரீதியாக உறவுக் கொண்டதாக ஜோயல் வாக்குமூலம் அளித்துள்ளது அவரிடம் சிகிச்சை மேற்கொண்ட பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version