இலங்கை
சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீ வைத்து எரிப்பு ; நடவடிக்கை எடுத்ததா பொலிஸ்
சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீ வைத்து எரிப்பு ; நடவடிக்கை எடுத்ததா பொலிஸ்
நுவரெலியா நாவலப்பிட்டி தொகுதியில் உள்ள சிங்களப் பாடசாலை ஒன்றில் கல்விகற்கச் சென்ற தமிழ் மாணவனை, அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவர்கள் தீ வைத்து எரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த சிறுவனின் கால்களை ரினர் ஊற்றி சக மாணவர்கள் எரித்துள்ளதாக தெரியவருகிறது.
கம்பளை வைத்தியசாலையில் பல நாட்கள் சிகிச்சை பெற்ற குறித்த மாணவன் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலை நிர்வாகமும் பொலிசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.