இலங்கை
ஜனாதிபதி அநுரவின் போக்குவரத்துச் செலவு விவரத்தை வழங்குவதற்குப் பின்னடிப்பு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம்
ஜனாதிபதி அநுரவின் போக்குவரத்துச் செலவு விவரத்தை வழங்குவதற்குப் பின்னடிப்பு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி யாழ்ப்பாணம் வந்து சென்ற நிலையில், அவரின் போக்குவரத்துச் செலவு தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு ஜனாதிபதி செயலகம் மறுப்புத் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் பயணச் செலவு தொடர்பில், தகவல் அறியும் உரிமைச்சட்டம் வாயிலாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இவ்வாறு தகவல் வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பயணச் செலவுகள் தொடர்பான தகவல்களை வழங்கினால், அது அவரின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக அமையும் என்பதாலேயே, தகவல் வழங்க முடியாதுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது. எனினும், தகவலைப் பெறுவதற்காக மேன்முறையீடு செய்யும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான விவரங்கள் அண்மையில் நாடாளுமன்றத்தில் வைத்து அறிவிக்கப்பட்டன. ஆதலால், வெளிநாட்டுப் பயண விவரங்களை வழங்குவது பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குள் வராதா என்ற கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.