சினிமா

தமிழ் சினிமாவில் உருவான புதிய முயற்சி…..! – இயக்குநராக உருவெடுக்கும் பிரபல நடிகர்!

Published

on

தமிழ் சினிமாவில் உருவான புதிய முயற்சி…..! – இயக்குநராக உருவெடுக்கும் பிரபல நடிகர்!

திரையுலகின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி தற்போது இயக்குநராக தனது புதிய பயணத்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் தமிழ்த் திரையுலகில் அதிகளவான வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தனது தனித்துவமான நடிப்பு மற்றும் மிருதுவான தோற்றத்தால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருக்கிறார்.தற்போது பராசக்தி படத்தில் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் இதைவிட பெரிய திருப்பமாக, இயக்குநராக மாறுவதற்கு புதிய முடிவெடுத்துள்ளார். அவருடைய முதல் படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.ஜெயம் ரவியின் முதல் படத்திற்காக பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபுவை கதாநாயகனாக தேர்ந்தெடுத்திருக்கிறார். இது தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. இந்த படம் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய, நகைச்சுவை கலந்த உணர்வுப்பூர்வமான கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் ஜெயம் ரவி தனது வாழ்க்கையில் சந்தித்த சில சவால்களை, கதையின் மூலமாக சொல்லப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை படக்குழுவினர் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். தற்போதைக்கு திரைக்கதை, நடிகர்களின் தேர்வு தேர்ந்தெடுத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.தமிழ் சினிமாவில் நடிகர்கள் இயக்குநராக மாறுவது புதிய விடயம் அல்ல. ஆனால், காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வு ஆகியவற்றை சேர்த்து புது திரைக்கதை உருவாக்குவது, அவரின் திறமையை வெளிப்படுத்தும் ஒன்று என சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version