உலகம்
தெற்கு சூடானில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அச்சம்!
தெற்கு சூடானில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அச்சம்!
தெற்கு சூடானில் உகண்டா பாதுகாப்பு படைகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தெற்கு சூடானில் உள்நாட்டு யுத்தம் தோற்றம் பெற்றக்கூடிய அச்சம் ஏற்பட்டுள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உகண்டா இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், உகண்டாவின் வடக்கு நாடான தெற்கு சூடானில் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் முன்வைக்கப்பட இருக்கும் சூழலில் ஜனாதிபதி சால்வா கீருக்கும் முதல் துணை ஜனாதிபதி ரிக் மச்சாருக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. அத்தோடு ஆங்காங்கே மோதல்களும் ஏற்பட்டுள்ளன.
இது தொடர்பில் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, இரண்டு நாட்களுக்கு முன்பு எங்கள் சிறப்புப் படைப் பிரிவுகள் தெற்கு சூடானின் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உகண்டா இராணுவம் தெற்கு சூடானின் ஒரு ஜனாதிபதியை மட்டுமே அங்கீகரிக்கிறது.
ஜனாதிபதி சல்வா கீருக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் உகண்டாவிற்கு எதிரான போர் அறிவிப்பாகக் கருதப்படும்.
அந்தக் குற்றத்தைச் செய்பவர்கள் அனைவரும் அதன் அர்த்தத்தை அறிந்து கொள்வார்கள்’ என்று அவர் கூறியுள்ளார்.