சினிமா

நயன்தாராவை துரத்திய பிரபல இயக்குநர்..! நடந்தது என்ன..?

Published

on

நயன்தாராவை துரத்திய பிரபல இயக்குநர்..! நடந்தது என்ன..?

தற்போது முன்னனியில் இருந்து வரும் நடிகை நயன்தாரா இவரது வளர்ச்சி அனைவரையும் வியக்க வைத்தாலும் தற்போது இவர் சினிமா தவிர்த்து பல விடயங்களை செய்து வருகின்றார். சுந்தர்சி இயக்கத்தில் “மூக்குத்தி அம்மன் 2″ படத்தில் நடித்து வருகின்றார்.முன்பை விட பட வாய்ப்புகள் குறைந்தாலும் இன்னும் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டுள்ளார். தமிழ் சினிமாவில் கெத்தாக இருக்கும் இவர் பல தடைகளை தாண்டி வளர்ந்து வரும் பெண்களின் ரோல் மாடல் ஆக இருக்கின்றார்.இந்த நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகர் சரத்குமார் நயன்தாரா தொடர்பில் ” ஐயா படத்தில் நயன்தாரா நடிக்க வந்த முதல் நாள் மாடர்ன் டிரெஸ்ல வந்து இறங்குனாங்க. அதை பார்த்து கோபப்பட்ட இயக்குனர் ஹரி ‘இந்த பொண்ண கூட்டிட்டு போங்கய்யா’ என சொல்லி துரத்திட்டார். இந்த படத்துக்கு இவங்க செட் ஆக மாட்டாங்க.. வெயிட் பண்ண சொல்லுங்க. சாயங்காலம் வேற காஸ்டியூம் கொடுத்து பார்க்கலாம்’ என சொன்னார். அதன்பின் பாவாடை தாவணியில் நயன்தாராவை பார்த்துவிட்டு ‘சரி இவரே நடிக்கட்டும் என சொல்லிவிட்டார்.” என கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version