இலங்கை

பெண் மருத்துவர் துஸ்பிரயோகம்; சந்தேகநபரின் வாக்குமூலம்! வெளியான பல தகவல்கள்

Published

on

பெண் மருத்துவர் துஸ்பிரயோகம்; சந்தேகநபரின் வாக்குமூலம்! வெளியான பல தகவல்கள்

அனுராதபுரம் மருத்துவமனையின் பெண் மருத்துவர் பாலியல் சீண்டல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 34 வயது சந்தேக நபர் நேற்று இரவு அனுராதபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேக நபர் நேற்று காலை கல்னேவ, ஹெலபதுகம பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

Advertisement

இந்த நபர் தொடர்பான பல உண்மைகளை கல்னேவ பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

 அவர் சிறையில் இருந்து பிணையில் வந்ததாகவும், பணம் இல்லாததால் பொருட்களைத் திருடும் நோக்கத்துடன் மருத்துவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றதாகவும் சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இதன் போது விடுதியில் பெண் மருத்துவர் மட்டுமே இருந்தது தனக்கு தெரியவந்ததாக ஒப்புக்கொண்டார்.

Advertisement

 சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்துபவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

நடைபெற்று வரும் விசாரணைகளில், சந்தேக நபர் அப்பகுதியில் உள்ள பல வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடியிருப்பது தெரியவந்துள்ளது.

 மேலும் அவர் நாட்டின் பிரபல குற்றவாளிகளின் பட்டியலில் பெயர் உள்ள ஒருவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

 சந்தேக நபரிடம் விரிவான விசாரணை நடத்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அனுராதபுரம் தலைமை நீதவான் நேற்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே அழுத்தவும்)

Advertisement

அனுசரணை

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version