இந்தியா

மின்தூக்கி அறுந்து வீழ்ந்ததில் ஊழியர் உடல் நசுங்கி உயிரிழப்பு!

Published

on

மின்தூக்கி அறுந்து வீழ்ந்ததில் ஊழியர் உடல் நசுங்கி உயிரிழப்பு!

சென்னை, தேனாம்பேட்டை தனியார் நட்சத்திர ஓட்டலில் மின் தூக்கி (Lift) பழுது பார்க்கும்போது ஊழியர் உயிழிந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் எனும் தனியார் ஹோட்டலில் உள்ள மின் தூக்கி பழுதாகியுள்ளது. 

Advertisement

பழுதை சரிசெய்யும் வகையில், பழுதான மின் தூக்கயை அப்படியே நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் பிற்பகலில் சரிசெய்யும் பணியின்போது விபத்து ஏற்பட்டுள்ளது. 

மின் தூக்கியை சரி செய்ய முயன்றபோது, மின் தூக்கி அறுந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

சம்பவ இடத்திற்கு விரைந்து இதுகுறித்து ஆய்வு செய்த பொலிஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version