உலகம்

அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு ஐ.நா பொதுச் செயலாளர் அதிருப்தி!

Published

on

அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு ஐ.நா பொதுச் செயலாளர் அதிருப்தி!

பிற நாடுகளின் மீது வரி விதிக்கும் முடிவால் பாதிப்பு மாத்திரமே ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதியாக 2ஆவது முறையாக பொறுப்பேற்றது முதல் ட்ரம்ப்,பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

Advertisement

குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றவாசிகளை தடுக்கத் தவறியதற்காகவும், போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்தாதற்கும், மெக்சிகோ, கனடா மீது தலா 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரியையும் விதித்தார். 

இதற்குப் பதிலடியாக, அமெரிக்கா மீது 25 சதவீத வரிகளைக் கனடா விதித்தது. 

அதேபோல, உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பும் நேற்று முதல் அமுலுக்கு வந்தது. 

Advertisement

உலக நாடுகள் மீது வர்த்தகப் போரை தொடுத்தால், அனைத்தையும் இழக்க நேரிடும் என்று அன்டோனியோ குட்டெரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version