சினிமா

இதுக்கெல்லாம் “டிராகன்” படம் தான் காரணம்..! வைரலாகும் நடிகையின் பதிவு

Published

on

இதுக்கெல்லாம் “டிராகன்” படம் தான் காரணம்..! வைரலாகும் நடிகையின் பதிவு

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான “டிராகன்” படத்தில் பல்லவி என்ற ரோலில் நடித்த கயாடு லோஹர் தனது நடிப்பால் பெரும் கவனத்தை ஈர்த்தார். இப்படத்தில் அவரது கிளாமர் ரோல் இளசுகளின் மனதில் இடம் பெற்று அவர் ஒரு சென்சேஷன் நடிகையாக மாறியுள்ளார்.அவரது நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற கயாடு லோஹர் தற்போது “டிராகன்” படத்தை தனது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திய முக்கிய படமாகக் கருதுகிறேன் என தெரிவித்துள்ளார். படத்தின் வெற்றியால் தன்னுடைய நடிகை வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.மேலும் இவர் படத்தில் பல்லவி என்கிற கதாபாத்திரத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி கதையின் முக்கிய பங்கினை வகித்துள்ளார். அடுத்து சிம்பு நடிக்கும் str 50 படத்திற்கு கமிட்டாகி இருக்கும் இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் “அஸ்வத் மாரிமுத்து எனக்கு முதலில் ஜூம் காலில் கதை சொல்லும்போது கீர்த்தி ரோலுக்காக கூறினார். அதில் நடிக்க அதிகம் ஆவலுடன் இருந்தேன். ஆனால் அதன் பிறகு அவரிடம் இருந்து அழைப்பு வரவில்லை. படம் என் கையை விட்டு போய்விட்டது என நினைத்தேன்.ஆனால் ஒரு மாதம் கழித்து அவர் என்னை மீண்டும் அணுகி பல்லவி ரோல் பற்றி கூறினார். இது இரண்டு ஹீரோயின் கதை என யோசிக்கவேண்டாம், மக்களுக்கு உன்னை பிடிக்கும் வகையில் தான் காட்டுவேன் என கூறினார்.அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். கொடுத்த வாக்கை காப்பாற்றியதற்கு நன்றி அஸ்வத் மாரிமுத்து. எனக்கு சிறந்த ஒரு அறிமுக படத்தை கொடுத்தீர்கள். உங்களுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்.பிரதீப் மாதிரி உண்மையான நண்பரை பார்க்க முடியாது. உங்கள் இயக்கத்தில் நடிக்க காத்திருக்கிறேன்”  என தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version