பொழுதுபோக்கு
இந்த கால காதலை ஆராயும் ‘2கே லவ் ஸ்டோரி’: ஒடிடி ரிலீஸ் குறித்து முக்கிய அறிவிப்பு!
இந்த கால காதலை ஆராயும் ‘2கே லவ் ஸ்டோரி’: ஒடிடி ரிலீஸ் குறித்து முக்கிய அறிவிப்பு!
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் சுசீந்திரன் இயக்கத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 14-ந் தேதி வெளியான 2கே லவ் ஸ்டோரி திரைப்படம் ஒடிடி வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது,கடந்த 2009-ம் ஆண்டு வெளியான வென்னிலா கபடிக்குழு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசீந்திரன். தொடர்ந்து, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, பாண்டியநாடு, ஆதலால் காதல் செய்வீர், ஈஸ்வரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவர் இயக்கிய குற்றமே குற்றம் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்து 2கே லவ் ஸ்டேரி என்ற படத்தை இயக்கியிருந்தார்.ஜகவீர், மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் இணைந்து நடித்த இந்த படத்தில் நடிகர் பால சரவணன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். டி.இமான் இசையமைத்திருந்த இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 14-ந் தேதி வெளியானது. இன்றைய காலக்கட்டத்தில் காதல இளைஞர்கள் மத்தியில் எப்படி இருக்கிறது என்பது குறித்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் ஓரளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.இளைய தலைமுறை இளைஞர்கள் எதிர்கொள்ளும் உணர்ச்சிகள் மற்றும் சவால்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த இந்த படத்தில், அந்தோணி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து மற்றும் சமூகவலைதள பிரமுகரான ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சமகால உறவுகள் மற்றும் நட்புகளின் சித்தரிப்புக்கு பங்களிக்கிறது. திரையரங்குகளில் வெளியானதும் இந்த படம் கலவையான பதில்களைப் பெற்றாலும், இன்றைய காதல் குறித்து பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது.இளம் காதல் மற்றும் தம்பதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய படத்தின் யதார்த்தமான சித்தரிப்பு பார்வையாளர்களில் ஒரு பகுதியினரை கவர்ந்தது. இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க தவறியவர்கள் வீட்டில் இருந்து பார்க்கும் வகையில்,படம் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மார்ச் 14-ந் தேதி முதல் (இன்று) ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்த படத்தின் திரையரங்க அனுபவத்தைத் தவறவிட்ட ரசிகர்களுக்கு தங்கள் வீடுகளின் வசதியிலிருந்து படத்தை பார்க்கும் ஒரு வாய்ப்பு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.