உலகம்

உருவானது செயற்கை இதயம்!

Published

on

உருவானது செயற்கை இதயம்!

இதய நோயினால் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவருக்கு முற்றிலும் செயற்கை இதயத்தை பொருத்தி மறுத்துவர்கள் வெற்றிகண்டுள்ளனர்.

உலகில் செயற்கை இதயத்துடன் நீண்டநாட்கள் வாழும் நபராகவும் அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். இந்த இதய மாற்று சிகிச்சை மருத்துவ உலகில் அளவிட முடியாத வெற்றியென அதனை மேற்கொண்ட மறுத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

குறித்த செயற்கை இதயத்துடன் நோயாளி 100 நாட்களை கடந்துள்ளார். மார்ச் மாத ஆரம்பத்தில் இயற்கை இதய மாற்று சிகிச்சை இடம்பெறுவதற்கு முன்னர் அவர் செயற்கை இதயத்துடன் இவ்வாறு வாழ்ந்து வந்துள்ளார்.

BiVACOR எனப்படும் செயற்கை இதயம் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பிறந்த மறுத்துவர் டேனியல் டிம்ஸ் என்பவரினால் உருவாக்கப்பட்டுள்ளது.

மனித இதயத்திற்கு முழுமையான மாற்றீடாக செயல்படும் உலகின் முதல் பொருத்தற்கூடிய சுழலும் இதய பம்பிகள் இதில் உள்ளன. ஆரோக்கியமான இதயத்தின் இயற்கையான இரத்த ஓட்டத்தை பிரதிபலிப்பதற்கு காந்த ஏற்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version