பொழுதுபோக்கு

ஓஹோ மேகம் வந்ததோ… இந்த நடிகை யார்னு தெரியுதா பாருங்க; வைரல் க்ளிக்ஸ்

Published

on

ஓஹோ மேகம் வந்ததோ… இந்த நடிகை யார்னு தெரியுதா பாருங்க; வைரல் க்ளிக்ஸ்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது சினிமா நடிகையாக உயர்ந்துள்ள சிவாங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவாங்கி கிருஷ்ணகுமார்.விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்.அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கிய சிவாங்கிக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வந்தனர்.குக் வித் கோமாளி 2-வது சீசனில் அஸ்வின் சிவாங்கி காம்போ, மற்றும் புகழ் சிவாங்கி காம்கோவுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய சிவாங்கிக்கு படவாய்ப்பும் குவிந்தது. அதில் சிவகார்த்திகேயனுடன் டான் படத்தில் நடித்திருந்தார்.வடிவேலுவின் ரீ-என்ட்ரி படமான நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்திருந்த சிவாங்கி, காசேதான் கடவுளா, சாட் பூட் த்ரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த சிவாங்கி இந்த சீசனில் குக்காக களமிறங்கியுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version