இலங்கை
தரம் 6 மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள்
தரம் 6 மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள்
2024 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு ஏற்ப பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு விசாக்கா வித்தியாலயத்துக்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்கள் 173 புள்ளிகளைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு ரோயல் கல்லூரிக்கு 169 புள்ளிகளையும் கொழும்பு இஸ்லாமிய மகளிர் கல்லூரிக்கு 162 புள்ளிகளையும், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் பாடசாலைக்கு 149 புள்ளிகளையும், அக்கறைப்பற்று ஸ்ரீ ராமகிருஸ்னா கல்லூரிக்கு 154 புள்ளிகளையும், பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு 141 புள்ளிகளும், வவுனியா சைவப்பிரகாச மகளிர் பாடசாலைக்கு 139 புள்ளிகளும், ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரிக்கு 160 புள்ளிகளும், ஹாலி எல ஊவா விஞ்ஞான கல்லூரிக்கு 144 புள்ளிகளும், கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு 144 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்துக்கு 148 புள்ளிகளும், இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரி 141 புள்ளிகளும், தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்துக்கு 140 புள்ளிகளும், மூதூர் மத்திய கல்லூரிக்கு 139 புள்ளிகளும், சாவகச்சேரி இந்து கல்லூரிக்கு 139 புள்ளிகளும், அட்டாளச்சேனை மத்திய கல்லூரிக்கு 139 புள்ளிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.