இலங்கை

படலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Published

on

படலந்த ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

படலந்த ஆணைக்குழு அறிக்கை சற்றுமுன்னர் (14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சபையில் சமர்ப்பித்தார்.

Advertisement

சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த அறிக்கையை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் சமீபத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அல்ஜசீரா செய்தி சேவைக்கு வழங்கப்பட்ட நேர்காணல் மற்றும் அதில் முக்கியமாக பேசப்பட்ட பட்டலந்த விவகாரம் பூதாகாரமாமாகியது.

Advertisement

  இலங்கையில் 1986 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் ரணில் தலமையில் படலந்த வலை முகாமில் பலர் வெட்டிக்கொல்லப்பட்டமை இலங்கை வரலாற்றின் கறுப்பு பக்கங்களில் ஒன்றாகும்.

1987 தொடக்கம் 1989 வரை ஆயிரக்கணக்கான JVP இளைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட ‘படலந்தை’ வதை முகாமில் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version