பொழுதுபோக்கு
மாமியாரை கடத்திய ரவுடிகள்: மருமகன் வேண்டுதலை கலைக்கும் மாமனார்: அடுத்து என
மாமியாரை கடத்திய ரவுடிகள்: மருமகன் வேண்டுதலை கலைக்கும் மாமனார்: அடுத்து என
அஞ்சலியை கலாய்த்த ரவுடிகள்.. ஆவேசமான மகேஷ், சிவராமன் கொடுத்த பதிலடி – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்கெட்டிமேளம் சீரியலின் நேற்றைய எபிசோடில் துளசி வெற்றிக்கு போன் செய்து அவனை பற்றியே பேசிய நிலையில் இன்று, வெற்றி வீட்டில் இருக்க அப்போது ஈஸ்வரமூர்த்தி சீக்கிரம் ரெடியாகு என்று சொல்ல வெற்றி எதுக்கு பா என்று கேட்கிறான். உன்னை மாப்பிள்ளை பார்க்க வராங்க என்று சொல்ல வெற்றி அதிர்ச்சி அடைகிறான்.அப்பா எல்லாத்தையும் எலக்ஷன் முடிந்த பிறகு பாத்துக்கலாம்னு தானே சொல்லி இருக்கேன், அப்படி இருக்கும் போது எதுக்கு இந்த ஏற்பாடு என்று கேட்க ஈஸ்வரமூர்த்தி எல்லாத்தையும் அரசியல் ஆதாயத்துக்காக தான் ஏற்பாடு செய்திருக்கேன் என்று சொல்கிறார். வெற்றி டல்லாக இருக்க அங்கு வந்த அண்ணி மீனாட்சி நீ நேராக மாமா கிட்ட போய் உண்மையை சொல்லிடு அது தான் சரியா வரும் என்று சொல்ல வெற்றி செய்வதறியாது நிற்கிறான்.இதனை தொடர்ந்து மகேஷ் ஆபிசில் இருக்க அஞ்சலி கதவை திறக்க முயற்சி செய்கிறாள். இந்தமுறையும் மகேஷ் போனில் அலாரம் அடிக்க டென்ஷன் ஆன அவன் கிளம்பி வீட்டிற்கு வருகிறான். அஞ்சலி இன்னைக்கும் கதவை திறக்க முயற்சி பண்ணியா? ஏன் இப்படி பண்ண? என்று கேட்க கேஸ் தீந்து போச்சு, செக்யூரிட்டி கிட்ட விஷயத்தை சொல்லலாம் என்று ஜன்னல் திறக்க முயற்சி செய்தேன். ஆனால் அங்கு யாரும் இல்லை. அதனால் கதவை திறக்க முயற்சி செய்ததாகவும் ஆனால் திறக்க முடியவில்லை எனவும் சொல்கிறாள்.மேலும் வெளியே எங்கயாவது போகலாலாமா என்று கேட்க மகேஷ் வேண்டாம் வீட்டிலே சமைத்து சாப்பிடலாம் என்று சொல்ல அஞ்சலி கோபித்து கொள்கிறாள். இதனால் மகேஷ் சரி வெளியே போகலாம் என்று அழைத்து செல்கிறான். லட்சுமி வீட்டில் நிலா சோறு சாப்பிட எல்லாரும் ஒன்று கூடுகின்றனர். துளசிக்கு வேலை கிடைத்து விட்டதாக சொல்ல ரகுராம் என்ன வேலை? எவ்வளவு சம்பளம் என கேட்டு நக்கலாக பேச சிவராமன் நீ குடும்பத்துக்கு ஒரு ரூபாய் கூட கொடுப்பது இல்ல.. உன் தம்பி வேலைக்கே போறது கிடையாது. முதல்ல நீங்க திருந்துங்க என்று பதிலடி கொடுக்கிறார்.மறுபக்கம் ஒரு பானிபூரி கடையில் காரை நிறுத்தி வாங்கி சாப்பிட ரவுடிகள் மூன்று பேர் அஞ்சலியை கிண்டல் அடிக்க மகேஷ் கோபமாகிறான். அவர்களிடம் சண்டைக்கு போக அஞ்சலி மகேஷை பிடித்து சண்டை வேண்டாம் என்று சொல்லி வீட்டிற்கு அழைத்து வருகிறான். நீ கவலைப்படாதே அஞ்சலி என மடியில் படுக்க வைத்து தலையை கொய்து அஞ்சலியை தூங்க வைக்கிறான். அஞ்சலி தூங்கியதும் அவங்களை சும்மா விட மாட்டேன் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடத்தப்பட்ட சாமுண்டீஸ்வரி.. கார்த்திக்குடன் உருவான மோதல், கல்யாணத்தில் நடக்கபோவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்கார்த்திகை தீபம் சீரியலின் நேற்றைய எபிசோடில் மண்டபத்திற்கு என்ட்ரி கொடுத்த சிவனாண்டி சாமுண்டீஸ்வரியை கடத்த திட்டமிட்ட நிலையில் இன்று, சிவனாண்டி சந்திரகலாவை வைத்து சாமுண்டீஸ்வரி கவனத்தை திசை திருப்பி அவளை கடத்தி விடுகிறான். இதனையடுத்து இங்கே கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் நடக்க சாமுண்டீஸ்வரியை காணவில்லை என தெரிந்து எல்லாரும் குழப்பம் அடைகின்றனர். சந்திரகலா அக்கா வந்துடுவாங்க, இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கணும் என்று எப்படியாவது கல்யாணத்தை நடத்தி விட வேண்டும் என முயற்சி செய்கிறாள்.ராஜேஸ்வரிக்கும் கடைசி நிமிடத்துல சாமுண்டீஸ்வரி எங்கே போனா என்ற சந்தேகம் எழுகிறது. சந்திரகலாவிடம் விசாரிக்க அக்கா கோவிலுக்கு போய் இருப்பதாக சொல்லி சமாளிக்கிறாள். மறுபக்கம் சாமுண்டீஸ்வரியை கடத்தி கொண்டு செல்லும் வேன் எதிரே வந்த கார்த்தியின் கார் மீது மோத ரவுடிகளுக்கும் கார்த்திக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பரிகாரத்தில் சூழ்ச்சி செய்யும் சௌந்தரபாண்டி.. சண்முகம் சமாளிக்கப்போவது எப்படி? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட் அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் இசக்கிக்காக விரதம் இருக்க முடிவெடுத்த நிலையில் இன்று, சண்முகம் குளிப்பதற்காக ஏற்பாடு செய்திருக்கும் தண்ணீரில் சௌந்தரபாண்டி ஐஸ் கட்டியை கொட்டி விடுகிறார். அடுத்து சண்முகம் குளிக்க செல்ல சௌந்தரபாண்டி என் பேரப்பிள்ளையோட உயிர் உன்கிட்ட தான் இருக்கு, விரதத்தை ஒழுங்கா முடி என்று சொல்ல சண்முகம் அதெல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்லி செல்கிறான்.ஒரு பாக்கெட் தண்ணீரை எடுத்து ஊற்றியதும் சண்முகத்திற்கு ரொம்ப குளிர எத்தனையோ முறை விடியற்காலையில் குளித்து இருக்கேன்.. எப்பவும் இப்படி இருந்தது இல்லையே என்ற சந்தேகம் எழுகிறது. கோவில் பூஜை என்பதால் இப்படி இருக்கலாம் என்று சொல்கின்றனர். அடுத்து சண்முகத்திடம் ஓகேவா என்று கேட்க அவனும் பிரச்சனை எதுவும் இல்லை என்று சொல்கிறான். சனியன், சௌந்தரபாண்டி ஆகியோர் என்ன இன்னும் ஒன்னும் ஆகல என சந்தேகம் அடைகின்றனர். இந்த சமயத்தில் சண்முகம் உடல்நிலை மோசமடைய தொடங்குகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது,