இலங்கை

யாழ். யூரியூப்பர் கிருஸ்ணா தொடர்ந்து விளக்கமறியலில் ; பிணை வழங்க மறுத்த நீதிமன்றம்

Published

on

யாழ். யூரியூப்பர் கிருஸ்ணா தொடர்ந்து விளக்கமறியலில் ; பிணை வழங்க மறுத்த நீதிமன்றம்

இளம் பெண்ணொருவரிடம் அத்துமீறி பேசியதற்தகாக கைது செய்யப்பட்ட யூரியூபர் கிருஷ்ணாவிற்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

நகர்த்தல் பத்திரம் மூலம் யூடியூப்பர் கிருஷ்ணாவின் வழக்கு இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் பிணைக்கு அனுமதி கோரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

Advertisement

எனினும் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 19ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.

வழக்கு தொடர்பில் எமது ஊடகம் இளவாலை பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொண்டபோது மேற்கண்ட விடயம் தெரிவிக்கப்பட்டது.

யாழில் வீடொன்றுக்குள் வைத்து பெண் பிள்ளையொன்றை தகாத முறையில் பேசிய யூடியூபர் கிருஷ்ணா பொதுமக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்

Advertisement

பண்டத்தரிப்பு பகுதியில் வைத்து ஊர் மக்களால் அவர் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் வகையிலான யூடியுப் தளம் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்ற குறித்த நபர் பெண் பிள்ளைகளை அவமானப்படுத்துவது போன்று பேசிய காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில், இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டது. அந்த வகையில் பல்வேறு தரப்பினரும் குறித்த நபருக்கு எதிராக கருத்தினை முன்வைத்து வந்தனர்.

Advertisement

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட யூடியூபர் கிருஷ்ணா உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும் நகர்த்தல் பத்திரம் மூலம் பிணை மனு கோரி இன்று மல்லாகம் நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றது.

இந்நிலையில், வழக்கானது எதிர்வரும் 19ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version