சினிமா

ரியோவின் ஸ்வீட் ஹார்ட் படம் வசூலைக் குவிக்குமா? ரசிகர்களின் திரை விமர்சனம்!

Published

on

ரியோவின் ஸ்வீட் ஹார்ட் படம் வசூலைக் குவிக்குமா? ரசிகர்களின் திரை விமர்சனம்!

நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான “ஸ்வீட் ஹார்ட்” திரைப்படம், அவரது திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான அம்சங்கள் கலந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இப்படத்தில் ரியோ ராஜ் இதுவரை நடிக்காத வித்தியாசமான நடிப்பில் நடித்திருக்கிறார். அந்தவகையில் திரையரங்கில் படம் பார்த்த ரசிகர்கள், ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தில் ரியோ ராஜ்  பெரிய முயற்சி ஒன்றினை செய்திருக்கிறார் என்றதுடன் அவருடைய நடிப்பு அழகாக இருக்கிறது என்றும் கூறியுள்ளனர். எனினும் சிலர் இதை எதிர்மறையாக விமர்சித்து வருகின்றனர். இதனால், இந்த படம் ஹிட் கொடுக்குமா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றது.மேலும் சிலர் படத்தின் திரைக்கதை மாஸ்டர்பீஸாக இருந்ததுதான் எனினும் பெரியளவில் எதிர்பார்ப்பாக காணப்படவில்லை எனக் கருத்துத் தெரிவிக்கின்றனர். சிலர் இப்படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் எனவும் கூறுகின்றனர். இவ்வாறாக வெளியீட்டுக்குப் பின் விமர்சனங்கள் கலவையாக வருவதனால் படம் நீண்ட நாள் ஓடுமா? ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version