சினிமா
ரியோ ராஜின் ஸ்வீட் ஹார்ட் எப்படி இருக்கு.? ஜோ அளவுக்கு தேறுமா.? முழு விமர்சனம்
ரியோ ராஜின் ஸ்வீட் ஹார்ட் எப்படி இருக்கு.? ஜோ அளவுக்கு தேறுமா.? முழு விமர்சனம்
விஜய் டிவி புகழ் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் ஜோ அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. அதை அடுத்து வெளிவந்த நிறம் மாறும் உலகில் பெரிய அளவில் கவனம் பெறவில்லை.
ஆனாலும் அவர் நடிப்பில் படம் இன்று வெளியாகி இருக்கிறது. ரிலேஷன்ஷிப் பற்றிய இந்த படம் ஜோ அளவுக்கு இருந்ததா தியேட்டரில் பார்க்கலாமா என்பதை விமர்சனத்தின் மூலம் இங்கு காண்போம்.
ஸ்வினித் எஸ் சுகுமார் இயக்கத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். ரியோவின் அம்மா அப்பா பிரிந்து வாழ்வதால் அவருக்கு ரிலேஷன்ஷிப் மீது பெரிய அளவில் நம்பிக்கை இல்லை.
ஆனால் ஹீரோயினுக்கு காதல் குடும்பம் என பல ஆசைகள் இருக்கிறது. இவர்கள் இருவரும் நட்பாக பழகி வரும் நிலையில் ஹீரோயினுக்கு ஹீரோ மீது காதல் வருகிறது.
ஆனால் ரியோ அதற்கு மறுப்பு சொல்கிறார். இருந்தாலும் விடாத ஹீரோயின் அவருடன் தொடர்ந்து பழகி வருகிறார். அது ஓவர் நெருக்கமாக மாறி ஹீரோயின் கர்ப்பமாகிறார்.
ஆனால் ரியோ அதை கலைக்க சொல்கிறார். இதற்கு ஹீரோயின் என்ன முடிவெடுத்தார்? இருவரும் சேர்ந்தார்களா பிரிந்தார்களா? என்பது தான் படத்தின் கதை.
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளதால் படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது. அதேபோல் ரியோ உடன் இணைந்து இவர் படத்தை பிரமோஷன் செய்தார்.
அதற்கேற்ப பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது. ஆனால் திரை கதையை பொருத்தவரை தள்ளாட்டம் தான்.
முதல் பாதி ஓகேவாக இருந்தாலும் இரண்டாம் பாதி கதையுடன் ஒட்டவில்லை. இதுவே பெரும் மைனஸ் ஆக இருக்கிறது.
அதில் கவனம் செலுத்த இயக்குனர் தவறி இருக்கிறார். ஆனால் ரியோவின் நடிப்பு குறை சொல்ல முடியாத அளவிற்கு இருக்கிறது.
ஹீரோயினும் தன்னுடைய பங்களிப்பை சரியாக கொடுத்துள்ளார். ஆனால் கதை படம் பார்ப்பவர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதனால் ஜோவை ஒப்பிட்டு பார்க்கும்போது இப்படம் சுமார் ரகம் தான். இருந்தாலும் ஒருமுறை பார்க்கலாம்.